உலக பௌத்தர்களின் புனித நாள் இன்று

“வெசாக் தினம் என்பது கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் பெறல் மற்றும் பரிநிர்வாணத்தை நினைவுகூரும் உலக பௌத்தர்களின் புனிதமான நாளாகும்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பௌத்தர்கள் விளக்குகளை ஒளிரவிட்டு, வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளித்து, மிகுந்த பக்தியுடன் இதனைக் கொண்டாடுகின்றனர்.

“சிறந்த நாளைக்காக இன்றே தியாகம் செய்வோம்” என்ற கௌதம புத்தரின் போதனையின் அடிப்படையில் ஞானம் பெறுவதற்காக புத்தர் கொண்டிருந்த பெரும் உறுதிப்பாட்டை, ஒரு நாடாக இந்த இக்கட்டான தருணத்தில் நாம் அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

“சப்பத்த சம்மானசோ” அனைவரையும் சமமாக நடத்தும் பௌத்த உபதேசத்தை இன்று நாம் நினைவுகூர வேண்டும். அதேபோல் ஒரு நாடாக அதை நடைமுறையில் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

இனம், மதம், சாதி, கட்சி வேறுபாடின்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து கட்டியெழுப்பப்படும் இந்நாட்டை தொடர்ந்து முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு புத்தரின் போதைனைகள் வழிகாட்டும்.

விரைவான பௌதிக வளர்ச்சியை நோக்கி நகரும் உலகில் மனவளர்ச்சியுடன் கூடிய ஆன்மீக மற்றும் கண்ணியமான ‘மனிதனை’ உருவாக்குவதே இந்த வெசாக் பண்டிகையின் முக்கிய நோக்கம் என்பதை நினைவில் வைத்து, அனைவருக்கும் சிறந்த வெசாக் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்” என தனது வாழ்த்துச் செய்தியை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உலக பௌத்தர்களின் புனித நாள் இன்று
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version