கைதான ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க விசேட குழு

ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என குற்றம் சுமத்தப்பட்டு இந்தியாவின் அஹமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் நால்வர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்படுபதற்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர்கள் தலைமையிலான குழுவை பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் நியமித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தாக்குதல் நடத்துவதற்கான தயார்படுத்தல்களை மேற்கொள்வதற்காக குறித்த நால்வரும் அஹமதாபாத் நகருக்கு சென்ற நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) இரவு கைது செய்யப்பட்டனர்.

இதன்படி, கொழும்பு மற்றும் நீர்கொழும்பைச் சேர்ந்த 27 வயதுடைய மொஹமட் நஃப்ரான், 33 வயதான மொஹமட் நுஸ்ரத், 35 வயதான மொஹமட் ஃபரிஷ் மற்றும் 43 வயதான மொஹமட் ரஷ்டீன் ஆகியோரே கைது செய்யப்பட்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version