பூரண உண்மையைப் போதித்த வெசாக் தினத்தைக் கொண்டாடுவோம்

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“பிரபஞ்சத்தில் பூரண உண்மையைக் கண்ட புத்தரால் பிரசங்கிக்கப்பட்ட ஸ்ரீ சதர்மம் அவருடைய போதனைகள் எக்காலத்துக்கும் பொருந்தும் என்பது நாளுக்கு நாள் உறுதிப்படுத்தப்படுகிறது.

வெசாக் என்பது ஒவ்வொரு இலங்கையரையும் சமூக, கலாச்சார மற்றும் கலை மற்றும் பொழுதுபோக்கு ரீதியாக செல்வாக்கு செலுத்தும் ஒரு பொதுவான சமூக விழாவாகும்.

உலகமே மத நல்லிணக்கத்தில் கவனம் செலுத்தும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். ஒரே வயிற்றில் பிறந்த சகோதரர்களைப் போல தேசிய நல்லிணக்கமும் மத நல்லிணக்கமும் நம் வாழ்வில் பிணைந்துள்ளது.

வெசாக கொண்டாட்டம் பௌத்த சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது.

முழு உலக பௌத்தர்களுக்கும் மிகவும் புனிதமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெசாக் பௌர்ணமி தினம், ஏறக்குறைய இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களாக எமது நாட்டு மக்களின் இரத்தத்தில் ஊறிய தினமாகும்.

புத்தபெருமான் உபதேசித்த பாதையில் நாம் சரியாக நடந்து, அந்த தர்மத்தை சரியாக பின்பற்றினால், அந்த தர்மத்தால் நெறிப்படுத்தப்பட்ட சமுதாயம் உலகில் மகத்துவம் அடைவது தவிர்க்க முடியாதது.

அந்த மகத்தான நம்பிக்கையை மனதில் கொண்டு இந்த ஆண்டு வெசாக் பண்டிகையை நம்பிக்கையுடனும் ஞானத்துடனும் கொண்டாடுவோம் ” என அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply