மலேசியாவிற்குச் சென்ற சட்டவிரோதமாக 1,608 இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள அறிக்கையில்
இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் குறித்த எண்ணிக்கையிலானோர் மீண்டும் நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மலேசிய அரசாங்கத்தின் புலம்பெயர்ந்தோரைத் திருப்பி
அனுப்பும் திட்டத்திற்கமைய இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.