‘கோல்டன் கேட் கல்யாணி’ திறப்பு விழா

கோல்டன் கேட் கல்யாணி எனப் பெயரிடப்பட்டுள்ள இலங்கையில் முதலாவது உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய களனி மேம்பாலம் இன்று (24/11) பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

புதிய களனி பாலமானது கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் கொழும்பு முனையிலிருந்து பண்டாரநாயக்க சுற்றுவட்டத்தினை சென்றடைவதுடன், அங்கிருந்து ஒருகொடவத்தை, இங்குருகொட சந்தி மற்றும் துறைமுக நுழைவாயில் வரை 4 வழிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, கோல்டன் கேட் கல்யாணி எனும் இந்த மேம்பாலம் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

‘கோல்டன் கேட் கல்யாணி' திறப்பு விழா
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version