இலங்கை பயணிக்கவுள்ள மாலைத்தீவு மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு 

இலங்கையில் புதிய இ-விசா முறை அறிமுகப்படுத்தப்பட்டமையைத் தொடர்ந்து மாலைத்தீவு சுற்றுலா பயணிகளுக்கு சுமூகமான மாற்றத்தை உறுதி செய்வதற்காக இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

தற்போது, மாலைத்தீவிலிருந்து இலங்கைக்கு வருகை தருபவர்கள்  30 நாள் சுற்றுலா விசாவை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். 30 நாட்களுக்கு மேலதிகமாக இலங்கையில் தங்குவதற்கு, 6 மாத இலவச விசாவிற்கு https://www.srilankaevisa.lk/ எனும் இணையத்தளத்தினுடாக விண்ணப்பிக்கலாம். இருப்பினும், இந்த செயன்முறைக்கு நிர்வாகக் கட்டணம் அறவிடப்படுகின்றது. 

இலங்கையில் இருக்கும் மாலைத்தீவு பிரஜைகளுள் விசாவை நீட்டிப்பதற்கு எதிர்பார்ப்பவர்கள் கொழும்பில் உள்ள மாலைத்தீவு உயர்ஸ்தானிகராலயத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை விசாவைப் பெற்றுக் கொள்வதில் மாலைத்தீவு பிரஜைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள நிவர்த்தி செய்ய இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ள மாலைதீவு பிரஜைகள் மேலதிக உதவிகளுக்காக சம்பந்தப்பட்ட அமைச்சுடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version