குஜராத்தில் தீ விபத்து -27 பேர் பலி

இந்தியாவில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 உயிரிழந்துள்ளனர்.

ராஜ்கோட் நகரில் உள்ள விளையாட்டு அரங்கில் நேற்று இந்த தீ விபத்து ஏற்பட்டது.

உயிரிழந்தவர்களில் 12 சிறுவர்களும் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள ஐவர் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply