யாத்திரைக்கு சென்ற வேன் விபத்து – ஒருவர் பலி

பாதெனியவிலிருந்து அனுராதபுரம் நோக்கி யாத்திரை சென்று கொண்டிருந்த வேன் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

கல்கமுவ, மீஓயாவிற்கு அருகில் இன்று (26) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாரதியின் கவனயீனமே விபத்திற்கான காரணம் என கூறப்படுகின்றது.

வேனில் சுமார் 15 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்தவர் எம்பிலிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

காயமடைந்த 13 பேர் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள‌ நிலையில்
07 பேர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply