கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வீசிய பலத்த காற்றின் காரணமாக கடந்த 20ம் திகதி முதல் 59 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளது. பொது இடங்கள், வீதிகள் மற்றும் வீடுகளுக்கு அருகில் இருந்த மரங்கள் இவ்வாறு வீழ்ந்துள்ளன.
கொழும்பில் மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் நேற்று(25.05) இரவு மூடப்பட்டிருந்த பல வீதிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. சேர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை சந்தியில் இருந்து ரொட்டுண்டா சுற்றுவட்டம் வரையான வீதியும், பொரளை சுற்றுவட்டத்திலிருந்து தும்முல்லை சுற்றுவட்டம் வரையான வீதியும் நேற்றிரவு மூடப்பட்டிருந்தது.
மரங்களுக்கு கீழாக வாகனங்களை நிறுத்தும் போது அவதானமாக இருக்குமாறு கொழும்பு மாநகர சபை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.