கிண்ணியா சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதன்படி கிண்ணியா பொலிஸாரால் ஒருவரும், திருகோணமலை பொலிஸாரால் இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்குள்ளான மிதப்பு பால படகை செலுத்திய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், குறித்த நபர்கள் மூவரும் தலைமறைவாகியிருந்ததாகவும் தெரிவித்தனர்.
பிந்திய செய்தி
திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பகுதியில் நேற்று (23/11) இடம்பெற்ற படகு விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்த நிலையில், குறித்த பகுதிக்கு இன்று (24/11) முதல் பஸ் சேவை வழங்கப்பட்டுள்ளது.
காக்காமுனையிலிருந்து நடத்தீவு, குறிஞ்சாக்கேணி வழியாக கிண்ணியா வரை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவை இடம்பெறுவதாக கிண்ணியா டிப்போ தெரிவித்துள்ளது.
எனினும் இந்த பஸ் சேவைக்கு பிரதேசவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் அறியமுடிகிறது.