‘ஒன்றுபட்ட நாடு – மகிழ்ச்சியான தேசம்’ எனும் தொனிப்பொருளில் அரசியல் கட்சிகள் சில மற்றும் சிவில் அமைப்புகள் சில ஒன்றிணைந்து ‘சர்வ ஜன பலய’ என்ற புதிய அரசியல் இயக்கம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
மவ்பிம ஜனதா கட்சி, பிவித்துரு ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தலைமையிலான சுயேட்சை உறுப்பினர்களும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
குறித்த அரசியல் இயக்கத்தை அமைப்பதற்கான எழுத்துமூல ஒப்பந்தம் இன்று (27) கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.