நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அத்தனகலு ஓயா, களனி, களு, ஜிங் மற்றும் நில்வலா ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.

நீர்ப்பாசனம், நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர், பொறியியலாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வர‌ இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நீர்த்தேக்கங்களை அண்மித்த தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குருநாகல் மாவட்டத்தின் தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் இன்று காலை 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. வினாடிக்கு சுமார் 7000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

குக்குலே கங்கை அனல்மின் நிலைய நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளும் திறக்கப்பட்டு வினாடிக்கு சுமார் 80 கனஅடி வீதம் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனால் குடா கங்கையின் நீர் மட்டம் உயரக் கூடும் எனவும் புலத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version