1,700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க இயலாது..! 

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள 1700 ரூபா சம்பள அதிகரிப்பை அரசாங்கம் பரிந்துரைத்தவாறு வழங்க முடியாது என தேயிலை தோட்ட உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தேயிலை தோட்ட உரிமையாளர்களுடன் கலந்துரையாடமல் சம்பள அதிகரிப்பை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தேயிலை தோட்ட உரிமையாளர்கள்  சங்கத்தின் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை இன்று(27.05) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். 

தொழில்துறையில் உள்ள அனைத்து தரப்பினரினதும் நலன்கள் மீது எவ்வித அக்கறையும் இல்லாமல் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பெருந்தோட்டங்களின் எதிர்காலம் மற்றும் நாட்டிலுள்ள தொழிலாளர்கள் மற்றும் சமூகங்களின் வாழ்வாதாரமும் ஆபத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

எவ்வித பலனுமில்லாத இத்தகைய தீர்மானத்தின் ஊடாக நாட்டின் தேயிலை மற்றும் இறப்பர் தொழிலை பலவீனப்படுத்தும் என தெரிவித்த தேயிலை தோட்ட உரிமையாளர்கள்  சங்கத்தின் பேச்சாளர், சிறு தேயிலை மற்றும் இறப்பர் தோட்ட உரிமையாளர்கள் மற்றும் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் நியாயமற்ற சம்பள உயர்வை ஏற்றுக் கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கும் முயற்சிகளும் இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply