அதிகாரப் பேராசையால் மதுபானங்களை ஊக்குவிக்கும் யுகம் 

அரசியல் சூதாட்டங்களில் சிக்கிக் கொள்ளாமல், நாட்டின் எதிர்காலம் மற்றும் நிகழ்காலத்தை குறித்து சிந்திக்க வேண்டும். இந்த அரசியல் சூதாட்டத்தால் சமூகம், கலாச்சாரம் சீரழிந்து வருகிறது. சிறு வயதிலிருந்தே பிள்ளைகளுக்கு தவறான பண்புகளை காட்டும் முறைமை சமூகத்தில் இன்றும் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பல்வேறு சலுகைகள் சிறப்புரிமைகள் காரணமாக தற்போது மதுபானங்களுக்கு உரிமப் பத்திரம் வழங்கும் சூதாட்டம் நாட்டில் இடம்பெற்று வருகிறது. எதிர்கால சந்ததியினர் குறித்து சிந்திக்காமல் பாடசாலைகள், விகாரைகளுக்கு முன்னால் வெட்கக்கேடான முறையில் மதுபானங்களை ஊக்குவிக்கின்றனர். மேடைகளில் மதுவை இல்லாதொழிப்போம் எனக் கூறி மதுவை ஊக்குவிக்ககும் முகமாக பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 203 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், திருகோணமலை, சேருவில, மொரவெவ, மஹதிவுல்வெவ தேசிய பாடசாலைக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(26.05) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு தலா ரூ.30 இலட்சம் வழங்கி அவர்களை சேவையில் இருந்து இடைநிறுத்தும் திட்டமொன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தப் போகிறது. இது குறித்து தெரிவிக்கப்பட்டவுடனேயே தாம் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியதாகவும், யுத்தத்தின் போது பாரிய பங்களிப்பை வழங்கிய சிவில் பாதுகாப்பு சேவை, யுத்த வெற்றியின் பின்னர் கைவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வாறானதொரு கால கட்டத்தில் முப்படையினர், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் நலன்களை பாதுகாக்க தாம் முன்நிற்போம்  என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply