நடைபெறவுள்ள ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
அவ்வாறானதொரு பட்சத்தில் அது தொடர்பான யோசனையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து கருத்துக்கணிப்பை நடத்தும் யோசனையை முன்வைக்கவும் ஐக்கிய தேசியக் கட்சியினால் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார கொழும்பில் இன்று (28.05) ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.