தேசிய ஒலிம்பிக் குழுவின் ஊடக மற்றும் சந்தைப்படுதல் முகாமையாளர் சிவராஜா கோபிநாத் இன்று (28.05) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய ஒலிம்பிக் குழுவின் இன்னுமொரு உத்தியோகத்தருடன் ஐரோப்பா நாடு ஒன்றுக்கு உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்வதற்காக விமானம் நிலையத்துக்கு சென்ற வேளையிலேயே அவர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளையில் அவரை 14 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் மக்ஸ்வெல் டி சில்வா உட்பட பல ஒலிம்பிக் குழு உறுப்பினர்கள் சந்தேக நபர்களாக உட்பட்டுள்ள மோசடி வழக்குடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபராக கோபிநாத் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த வழக்கை தாக்கல் செய்தவரது வழக்கறிஞர் நீதிமதின்றதில் முன்னிலையாகி கோபிநாத்துக்கு பிணை வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்ததன் அடிப்படையில் அவருக்கான பிணை மறுக்கப்பட்டதாக வி மீடியாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினால் குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் நடாத்தப்பட்டு வருகின்றன.
குறித்த வழக்குடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களான மலிங்க பெர்னாண்டோ, தினேஷ் கிரிஷாந்த மற்றும் தற்போதை செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா, பொருளாளர் காமினி ஜயசிங்க ஆகியோர் ஊழல், மோசடிகளில் ஈடுப்பட்டதாகவும். ஆட்கடத்தலில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
தேசிய ஒலிம்பிக் குழுவின் உறுப்பினரான கோபிநாத், ரக்போல் அமைப்பின் திட்ட முகாமையாளராகவும், நடன விளையாட்டின் செயலாளராகவும், செயற்பட்டு வருகிறார் என சுட்டிக்காட்டியுள்ள ஆங்கில ஊடகம், இந்த விளையாட்டு அமைப்புகள் நிஜம் அற்றவை எனவும், காகித கழகங்களாக செயற்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. இவரது சகாக்களினால் உருவாக்கப்பட்டுள்ள பனி விளையாட்டு எனும் அமைப்பும் இவ்வாறான அமைப்பென குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. நடன விளையாட்டின் செயாளரான கோபிநாத் அந்த அமைப்பின் நியமிக்கப்பட்ட தலைவரான மாலிங்க பெர்னான்டோவின் கையொப்பத்தை பாவித்து 800,000 ரூபாவை தொழிலதிபர் ஒருவரிடமிருந்து அனுசரணை பணமாக பெற்றதாகவும், அவர் பின்னர் அச்சுறுத்தப்பட்டதாகவும் மேலும் செய்தி வெளியாகியுள்ளது.
கணனி தொழிநுட்பத்தில் வல்லவரான ஒலிம்பிக் குழுவின் செயலாளர் மக்ஸ்வெல் டி சில்வாவுக்கு நெருக்கமான கோபிநாத்தின் கைது, பல வருடங்களாக சுதந்திரதமாக ஊழலில் ஈடுப்பட்டு வந்தவர்களுக்கு இனி முடிவு கட்டப்படுமென மேலும் வெளியாகியுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.