பிரான்ஸ் தூதுவர் மறைவிற்கு ஜீவன் தொண்டமான் இரங்கல்

இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் பிராங்கோயிஸ் பேக்டெட் இழப்புக்கு நீர் வழங்கள் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜீவன் தொண்டமான் தனது இரங்கலை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“கொழும்பு இராஜகிரியவில் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்த இலங்கை மற்றும் மாலைத்தீவு நாட்டுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் பிராங்கோயிஸ் பேக்டெட் இழப்புக்கு நேரில் சென்று தனது அனுதாபத்தை தெரிவித்தேன்.

கொழும்பில் உள்ள பிரான்ஸ் தூதரகத்திற்கு இன்று (28) காலை விஜயம் மேற்கொண்ட நான் எனது இரங்கலைத் தெரிவித்ததோடு, அங்கு வைக்கப்பட்டிருந்த விசேட நினைவுக்குறிப்பேட்டில் தனது அனுதாப செய்தியையும் பகிர்ந்துக்கொண்டேன்..

மேலும் பிரான்ஸ் நாட்டின் தூதுவரின் திடீர் உயிரிழப்பு தொடர்பில் நாம் மிகுந்த மன வேதனையடைந்தோம் என்றும், அத்தோடு பிரான்ஸும் இலங்கையும் நெடுங்காலமாக நட்பு பேணப்பட்டு வரும் நாடுகளாக திகழ்வதையும் நினைவுக்கூர்ந்தேன்.

மேலும் இலங்கை நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி நிலையில் பிரான்ஸ் நாட்டின் தூதுவரின் பங்களிப்பு இலங்கைக்கு மிகையாக காணப்பட்டதுடன் பெருந்தோட்ட பகுதிகளில் கால்நடை அபிவிருத்தி விடயம் தொடர்பாக அபிவிருத்தி செயற்திட்டங்கள் தயார் நிலையில் இருந்தபோது அவரின் திடீர் மறைவு பேரிழப்பாகும் என்பதை என்னி கவலையடைகின்றேன்.

இந்த விஜயத்தின் போது எனது பிரத்தியேக செயலாளர் மொகமட் காதர், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி ஆகியோர் வருகை தந்திருந்தனர்”

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version