டி20 உலக கிண்ண தொடருக்கான முதலாவது பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது. இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் பங்குபற்றிய பயிற்சிப் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பில் அணித் தலைவர் வனிந்து ஹசரங்க மற்றும் தீக்ஷன ஆகியோர் பந்து வீச்சில் ஈடுப்படவில்லை.
182 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியால் வெற்றியிலக்கை அடைய முடியவில்லை. இலங்கை அணி 10 ஓவர்களில் 59 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்திருந்த போது களத்திற்கு வந்த அணித் தலைவர் வனிந்து ஹசரங்க தொடர்ச்சியாக 5 பந்துகளில் 5 சிக்ஸர்களை விளாசியிருந்த போது 6வது பந்தில் ஆட்டமிழந்தார்.
இதன்படி, டி20 உலக கிண்ண தொடருக்கான பயிற்சிப் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக நெதர்லாந்து அணி வெற்றியீட்டியது.