பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டத்தை நிறைவு செய்யுமாறு கோரிக்கை 

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பை நிறைவு செய்து மீண்டும் பணிக்குத் திரும்புமாறு, கல்வி அமைச்சு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் தொழிற்சங்கங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை, ஜனாதிபதி நியமித்துள்ள நிபுணர் குழுவிடம் முன்வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2018ம் ஆண்டு முதல் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக சேவைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் தமது பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகளை நிபுணர் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான நிதியை இந்த ஆண்டு பெற்றுக் கொள்ள இயலாது என்பதால், நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளை 2025ம் ஆண்டு வரவு செலவு திட்டத்திற்கு வழங்குமாறு ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார். 

Social Share

Leave a Reply