அபாய பகுதிகளில் 300 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள்

அதிக மண்சரிவு அபாய பகுதிகளில் 300 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

அடையாளம் காணப்பட்டுள்ள பாடசாலைகள் அமைந்துள்ள பகுதியில் அனர்த்தங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வு பிரிவின் பணிப்பாளர் காமினி ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.

இதேவேளை, மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் சுமார் 14,000 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

எவ்வாறாயினும் 2500 இற்கும் மேற்பட்ட குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பதுளை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்கள் மண்சரிவு அதி அபாய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version