ஆறுமுகன் தொண்டமானின் 60 ஆவது ஜனன தினம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 60 ஆவது ஜனன தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வை முன்னிட்டு கொட்டகலை CLF வளாக ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர், அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் மாளை அணிவித்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதன்போது இ.தொ. காவின் பிரதி தலைவர்களான , அனுஷியா சிவராஜா,கணபதி கனகராஜ் ,தேசிய அமைப்பாளர் P.சக்திவேல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜதுறை,போசகர்களான சிவராஜா, ஜெகதீஸ்வரன் இ.தொ.கா முன்னாள் பிரதேச சபை தலைவர்கள், சபை உறுப்பினர்கள் , காரியாலய உத்தியோகஸ்தர்கள் மற்றும் மாவட்ட தலைவர் தலைவிமார்கள் ,தோட்ட தலைவர் ,தலைவிமார்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version