முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி

முல்லைத்தீவில் சட்ட விரோதமான முறையில் இடம்பெறும் ஆழ்கடல் மற்றும் களப்பு மீன்பிடி நடவடிக்கைகளை தடுப்பதற்கு
மாவட்ட அபிவிருத்திக்குழு மற்றும் விசேட கூட்டங்களில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் தற்போதைய கள நிலமைகளை ஆராயும் பொருட்டு விசேட மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நேற்று பிற்பகல் (29.05) இடம்பெற்றது.

இதன்போது, சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்தல் மற்றும் அவர்களுக்கு எதிரான சட்டங்களை அமுல்படுத்தல் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் கடற்தொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் உதவி ஆணையாளர் திரு.கா.மோகனகுமார், மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர் , மீனவ சங்கம் மற்றும் சமாசங்களின் பிரதிநிதிகள், மீனவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version