டொனால்ட் டிரம்ப்பிற்கு ஜூலை மாதம் தண்டனை

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் வழக்கு விசாரணையில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் தம்மைப் பற்றிய தவறான செய்திகளை மறைக்க டிரம்ப் நிதி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

நடிகைக்கு ட்ரம்பின் முன்னாள் சட்டத்தரணி மைக்கேல் கோகன் பணத்தை வழங்கியிருந்தார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் டொனால்ட் டிரம்ப் 34 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினார்.

இந்த கொடுப்பனவு தொடர்பில் போலியான வியாபார அறிக்கையொன்றை தயாரித்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட முதல் ஜனாதிபதியாக டிரம்ப் கருதப்படுகிறார்.

டிரம்ப் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், ஜூலை மாதம் 11 ஆம் திகதியன்று அவருக்கு தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் டிரம்ப்பிற்கு அதிகபட்சமாக 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version