ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க இயலாது – ஐ.ம.ச 

மாகாண சபைத் தேர்தல் முறை திருத்தியமைக்கப்பட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க குண்டை போட்டார். தேர்தலை நடத்துமாறும் அரசியல் விளையாட்டுகளை விளையாட வேண்டாம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பல அழுத்தங்களை கொடுத்தன. பின்னர் ரணில் விக்கிரமசிங்க அந்த குண்டை வாபஸ் பெற்றார்.

தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் போது ரணில் விக்கிரமசிங்க ஒவ்வொரு குண்டாக போட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிறார். இவ்வாறு போடும் இந்த குண்டுகள் பல வெடிக்கவில்லை. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாதிருக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் நடவடிக்கை எடுத்தார். ஆனால் நாட்டின் பொருளாதார வங்குரோத்து நிலையில் உள்ளூராட்சி தேர்தல் முக்கியமான தேர்தலாக அமையவில்லை. இதனடிப்படையில் நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதற்கு ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு நாம் இடமளிக்க மாட்டோம்.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பில் பாலித ரங்கே பண்டார விடுத்துள்ள அறிக்கை வாபஸ் பெறுவார். தமக்கு மக்கள் ஆணை இல்லை என்பது ஜனாதிபதிக்கு நன்றாகவே தெரியும். போனஸ் வாய்ப்போடே அவர் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வர வேண்டும்.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பில் பாலித ரங்கே பண்டார தெரிவித்த கருத்துக்கு பின்னணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார். எதிர்காலத்தில் கண்டிப்பாக ஜனாதிபதித் தேர்தல் நடக்கும், பொதுத் தேர்தலை நடத்த கால அவகாசம் இல்லை. ரணில் விக்கிரமசிங்க அவர்களால் அல்லது தேர்தல்கள் ஆணைக்குழுவாலோ ஜனாதிபதித் தேர்தலை நிறுத்த முடியாது. ஜனாதிபதி தேர்தலை எந்த தரப்பாலும் தடுக்க முடியாது.

பசில் ராஜபக்சவுக்கு இப்போது செல்ல இடமில்லை. பொதுஜன பெரமுன பல பிரிவுகளாக உடைந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், அவருடன் பொதுஜன பெரமுனவின் ஓரு சாரார் வந்து இணைவர். எனவே பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களை பொதுஜன பெரமுன கட்சியில் பாதுகாத்துக் கொள்ளவே பசில் ராஜபக்ச முயற்சிக்கிறார். மொட்டுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் தற்போது போட்டி இடம்பெற்று வருகிறது. எந்த தேர்தலை வைத்தாலும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியே வெற்றி பெறும். 

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version