ஊழல்,மோசடியை பாதுகாக்கும் அரசாங்கமே நாட்டை ஆள்கிறது – சஜித்

திருட்டு, ஊழல், இலஞ்சம், மோசடி போன்றவற்றை பாதுகாக்கும் அரசாங்கமே தற்போது நாட்டை ஆட்சி செய்வதாக
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 218 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள்,
அம்பாறை, தெஹியத்தகண்டிய, சந்துன்புர தேசிய பாடசாலைக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (03.06) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

எமது நாடு தற்போது வங்குரோத்தடைந்தொரு நாடாகும். இந்த வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்கு வெளிப்படையான,
நேர்மையான மற்றும் திருட்டு இல்லாத திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.
என்றாலும் அவ்வாறானதொரு எந்த திட்டமும் இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை.

பாக்டீரியா தொற்றுகளைத் தடுக்கும் Meropenem என்ற தடுப்பூசி 2022 நவம்பரில் நாட்டில் கையிருப்பில் இல்லை எனக் கூறி,
அவரச கொள்முதல் முறையின் மூலம் 450,000 தடுப்பூசி குப்பிகளை கொள்வனவு செய்யப்பட்டது. இதன் மூலம் நாட்டுக்கு முப்பத்தாறு கோடி
எண்பத்தி ஒன்பது இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை கூறுகிறது.
இது நாட்டின் வளங்களை பட்டப்பகலில் திருடும் செயலாகும்.

488590 தடுப்பூசிகள் அன்று கையிருப்பில் இருந்தன. ஒரு குப்பியும் இல்லை என கூறி, அவரச கொள்முதல் மூலம் தான் இந்தப் புதிய
பங்கு பெறப்பட்டுள்ளது. ஒரு குப்பி ரூ.1075 க்கு கிடைத்தும், ரூ.1895 க்கு இது கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

விவசாயம், வியாபாரம் மற்றும் தொழில் முயற்சியாண்மைகள் வீழ்ச்சியடைந்துள்ள வங்குரோத்தான நாட்டில் கூட தடுப்பூசி குப்பிகளில்
இருந்து கமிஷன் பெற்றுள்ளனர். இந்த ஊழல் செயற்பாட்டை முன்னெடுத்த முன்னாள் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை
ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்தது. இதில் அவரைப் பாதுகாக்க 113 பேர் கைகோர்த்திருந்தனர். அவர்கள் தவறான விடயத்துக்கு கைகளை
உயர்த்தி, ஆதரித்து திருட்டு, இலஞ்சம், ஊழல் ஆகியவற்றைப் பாதுகாத்து வருகின்றனர் .

இந்தத் தடுப்பூசிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட அதிகப்படியான நிதியை ஸ்மார்ட் வகுப்பறைகளை திறந்து வைக்க பயன்படுத்தியிருக்காலம்.
ஏமாற்றும் பொய்யுமே நாட்டில் 24 மணி நேரமும் நடந்து வருகிறது. 220 இலட்சம் மக்களும் முட்டாள்கள் என்றே ஆட்சியாளர்களால் கணக்கிட்டு நடந்து வருகின்றனர்
என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

பொய்யான செய்திகளை பரப்புவதால், தவறாக சித்தரிப்புகளை செய்து குழப்ப நிலைகளை ஏற்படுத்துதல், ஏமாற்றி கமிஷன்
எடுத்தல் என்பன தற்போது பரவலாக நடந்து வருகின்றனர். ஐக்கிய மக்கள் ஆட்சியில், ஊழலுக்கு எதிராக வெளிப்படைத்தன்மையுடன்
போராட உறுதிபூண்டுள்ளோம்.

நாட்டின் 220 இலட்சம் மக்களை வாழ வைக்கும் சகாப்தத்தை உருவாக்குவோம். அனைத்துத் திருட்டுகளும் ஒழிக்கப்பட்டு,
திருடிய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, நாடு இழந்த பணம், சொத்து செல்வங்களை மீண்டும் நாட்டுக்கு மீளப்பெறுவோம்” என கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version