மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞான துறைகளில் கல்வித் திறன், ஆராய்ச்சி மற்றும் வினைத்திறன் மிக்க கற்கைகளுக்கு சிறந்து விளங்கும் டெல்லி Dr B.R. அம்பேத்கர் பல்கலைக்கழகம் பல்வேறு துறைகளிலுமான அதீத முக்கியத்துவத்துடன் (AUD) பலதரப்பட்ட பட்ட மற்றும் பட்ட மேற்படிப்பு கற்கை நெறிகளை வழங்குகிறது.
மாணவர்கள் தமது துறைகளில் முழுமையான கவனத்தினை செலுத்தி அவர்களின் முழு திறனை வளர்த்துக் கொள்வதனை உற்சாகமாகவும் அறிவுபூர்வமாகவும் ஊக்குவிக்கும் சூழலையும் இப்பல்கலைக்கழகம் வழங்குகிறது.
இந்நிலையில் டெல்லி Dr B.R. அம்பேத்கர் பல்கலைக்கழகம் (AUD) 2024-25 கல்வி ஆண்டில் சர்வதேச மாணவர்களுக்காக பட்ட மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கான அனுமதிகளை வழங்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானி காரியாலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுடைய விண்ணப்பதாரிகள் https://audfsradmission.samarth.edu.in/ என்ற இணையத்தளத்தில் 2024 ஜூன் 15 ஆம் திகதி வரை குறித்த பட்ட மற்றும் பட்ட மேற்படிப்பு கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இவ்விடயம் குறித்து மேலதிக தகவல்களை பெற விரும்பும் மாணவர்கள் dydeania@aud.ac.in என்ற மின்னஞ்சல் மூலமாக குறித்த பல்கலைக்கழகத்தினை அணுகமுடியும். மேலும் தகவல்களை பெற பல்கலைக் கழகத்தின் https://aud.delhi.gov.in/admission/Foreign-Student என்ற இணையத்தளத்தினையும் மாணவர்கள் பார்வையிடலாம்.