தயாசிறி தொடர்பில் தீர்மானிக்க மைத்திரிக்கு கால அவகாசம் வழங்கிய நீதிமன்றம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக கடமையாற்றிய தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்து வெளியிடப்பட்ட கடிதம் மீளப்பெறப்படுமா, இல்லையா என்ற தீர்மானத்தை அறிவிப்பதற்கு மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதவியிலிருந்து தம்மை நீக்கியமைக்கு எதிராக தயாசிறி ஜயசேகரவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு இன்று(05.06) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

இதன்போது, தயாசிறி ஜயசேகரவுக்கு எதிரான கடிதத்தை மீளப்பெறுவதா, இல்லையா என்ற தீர்மானத்தை அறிவிப்பதற்கு கால அவசகாசம் தேவைப்படுவதாக மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் மைத்திரிபால சிறிசேன, பதில் பொதுச் செயலாளர் சரத் ஏக்கநாயக்க ஆகியோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்துள்ளார். 

அதன்படி, இரண்டு வார கால அவகாசம் வழங்கி, அடுத்த அமர்வில் தமது தீர்மானத்தை தெரிவிக்குமாறு, மனுதாரர்களுக்கு நீதியரசர்கள் உத்தரவிட்டனர். இந்த மனு எதிர்வரும் 26ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version