ஆதிக்கத்துடன் உலகக் கிண்ணத் தொடரை ஆரம்பித்த இந்தியா  

டி20 உலகக் கிண்ணத் தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றியீட்டியது. அமெரிக்காவின் நியூயார்க் மைதானத்தில் இன்று(05.06) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 16 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 96 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. அயர்லாந்து அணி சார்பில் டேவிட் டெலானி 26 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் ஹட்ரிக் பாண்டியா 3 விக்கெட்டுக்களையும், அர்ஷ்தீப் சிங், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 

97 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது. இந்திய அணி சார்பில் அணித் தலைவர் ரோஹித் சர்மா 52 ஓட்டங்களையும், ரிஷப் பாண்ட் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இதன்படி, இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக இந்திய அணியின் பும்ரா தெரிவு செய்யப்பட்டார்.

இதேவேளை, டி20 உலகக் கிண்ணத் தொடரில் மேலும் மூன்று போட்டிகள் நாளை(06.06) நடைபெறவுள்ளன. மேற்கிந்திய தீவுகளில், காயானவில் காலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் பப்புவா நியூ கினியா மற்றும் உகண்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

இதேவேளை, மேற்கிந்திய தீவுகளில் பார்படோஸ் மைதானத்தில் காலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் ஓமான் அணிகளும், அமெரிக்காவின் இரவு 9.00 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் பாக்கிஸ்தான் மற்றும் அமெரிக்க அணிகளும் மோதவுள்ளன. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version