புதிதாக 10 தாவரவியல் பூங்காக்களை அமைக்க திட்டம் 

நாட்டில் புதிதாக 10 தாவரவியல் பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போது பிரதமர் தினேஷ் குணவர்தன இந்த விடயத்தை தெரிவித்தார். 

பேராதனை, நுவரெலியா, கம்பஹா, அவிசாவளை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் தற்போது தாவரவியல் பூங்காக்கள் உள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதமர், நாட்டில் உள்ள காலநிலை வலயங்களின் அடிப்படையில் மேலும் 10 தாவரவியல் பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார். 

காலியில் சதுப்புநில தாவரவியல் பூங்காவை அமைப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், வவுனியா, அம்பாறை, பொலன்னறுவை மற்றும் தெனியாய ஆகிய பிரதேசங்களில் தாவரவியல் பூங்காக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 தாவரவியல் பூங்காக்களின் ஊடாக பொது மக்களும், குறிப்பாக பாடசாலை மாணவர்களுக்கு பயனடைவார்கள் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version