மேல் மாகாணத்தில் நேற்று (23/11) நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது முறையாக முகமூடி அணியாத சுமார் 10,000 பேருக்கு பொலிஸார் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மேல் மாகாணத்தை உள்ளடக்கி, கொவிட் 19 நோய் பரவலை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி பஸ்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் சரியாக முகமூடி அணியாத 9,658 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், முகக்கவசம் அணியாத 4,351 பேருக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.
கொவிட் – 19 நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் தினமும் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.