நிதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஒழுக்காற்று குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் பதவிகளைப் பொறுப்பேற்று தனது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதால் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஒழுக்காற்று குழு கோரிக்கை விடுத்திருந்தது.
அதற்கமைய மேற்குறிப்பிடப்பட்டுள்ள காரணத்திற்காகவும் வேறு சில காரணங்களின் அடிப்படையிலும் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கட்சி அனுமதி வழங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க நேற்று(07.06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.