எமதான சொந்த உறவுகளைத் தேடி பிரபஞ்சம் யாழ்ப்பாணத்துக்கு – சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களது எண்ணக்கருவில் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘பிரபஞ்சம்’ஸ்மார்ட்
வகுப்பறை வசதிகள் மற்றும் பாடசாலை பஸ் வழங்கும் வேலைத்திட்டங்களின் மேலும் பல கட்டங்கள் எதிர்வரும் நாட்களில்
யாழ் மாவட்டத்தை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன் பிரகாரம் யாழ் மாவட்டத்தில் 13 பாடசாலைகளுக்கு ரூபா. 1,177,000 பெறுமதியான கணினிகள்,அச்சு இயந்திரங்கள், ஸ்மாட்
வகுப்பறை உபகரணங்கள் மற்றும் ஸ்மார்ட் திரைகள், அகராதிகள் என்பன வழங்கி வைக்கப்படவுள்ளன.

மேலும், பாடசாலையொன்றுக்கு 50 இலட்சம் ரூபா மதிப்பிலான பஸ் ஒன்றும் வழங்கி வைக்கப்படவுள்ளது.

பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைகள் திட்டத்தின் கீழ் இதுவரை 224 பாடசாலைகளுக்கு 224 ஸ்மார்ட் வகுப்பறைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன்
ரை 2502 இலட்சம் ரூபா இதற்காக செலவிடப்பட்டுள்ளன.

பிரபஞ்சம் பஸ் வழங்கும் திட்டத்தின் கீழ் 87 பாடசாலைகளுக்கு 50 இலட்சம் ரூபா
பெறுமதியான 87 பஸ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் 4242 இலட்சம் ரூபா இதற்காக செலவிடப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version