தீர்வின்றி தொடரும் ரயில் சாரதிகளின் தொழிற்சங்க நடவடிக்கை – பயணிகளின் அசௌகரியம்

ரயில் இயந்திர சாரதிகள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக இன்று (09.06) காலை 35 ரயில் சேவைகள்
ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

ரயில் இயந்திர சாரதிகள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு மூன்றாவது நாளாக இன்றும் (09.06) தொடர்வதாக லோகோமோட்டிவ்
ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு வழங்குவதில் தாமதம், ஆட்சேர்ப்பில் தாமதம் உள்ளிட்ட பல பிரச்னைகளை முன்வைத்து கடந்த 06ம்
திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கை கடுமையாக்கப்படும் என லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம்.சேனநாயக்க கூறியுள்ளார்.

இதன்காரணமாக ரயில் பயணிகள் சிரமத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர்களின் நலன் கருதி மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version