டி20 உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அணி வெற்றியீட்டியது. அமெரிக்கா, நியூயோர்க்கில் நேற்று(09.06) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 119 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்திய அணி சார்பில் ரிஷப் பாண்ட் 42 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பாகிஸ்தான் அணி சார்பில் பந்து வீச்சில் நசீம் ஷா, மொஹமட் அமீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
120 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 113 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது. பாகிஸ்தான் அணி சார்பில் மொஹமட் ரிஸ்வான் 31 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் பும்ரா 3 விக்கெட்டுக்களையும், ஹட்ரிக் பாண்டியா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இதன்படி, இந்த போட்டியில் இந்தியா அணி 6 ஓட்டங்களுடன் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக இந்திய அணியின் பும்ரா தெரிவு செய்யப்பட்டார்.