நெருங்கும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திருமணம்

வரலக்ஷ்மி சரத்குமாரின் திருமண அழைப்பிதழ்களை பல்வேறு திரையுலக பிரபலங்களுக்கு சரத்குமார் குடும்பத்தினர் நேரில் சென்று வழங்கி வருகின்றனர்.

நடிகை வரலக்ஷ்மியின் திருமணம் அடுத்த மாதம் 2 ஆம் திகதி தாய்லாந்தில் நடைபெற உள்ளது.

சென்னையில் வரவேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ள நிலையில் நடிகர் சரத்குமார் அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.

அண்மையில் வரலட்சுமி சரத்குமாரின் திருமண அழைப்பிதழை சரத்குமார் குடும்பத்தினர் நேரடியாக நடிகர் கமலஹாசனை அவரது இல்லத்தில் சந்தித்து வழங்கியிருந்தனர். இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றனர்.

Social Share

Leave a Reply