இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 14ஆம் திகதி இத்தாலிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜி 7 அமைப்பில் அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான், இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாகவுள்ள நிலையில், இதன் 50ஆவது உச்சி மாநாடு இத்தாலியின் ஃபசனோ (Fasano) நகரில் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இத்தாலி தலைமையேற்று நடத்தும் இம்மாநாட்டுக்கு அந்நாட்டு அரசு சார்பில் இந்தியா, சவூதி, பிரேஸில், தென்னாபிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க வருமாறு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த அழைப்பையேற்று பிரதமர் மோடி ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க வரும் 14ஆம் திகதி ஒரு நாள் பயணமாக இத்தாலி பயணிக்கவுள்ளார்.
அவர் மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராக பதவியேற்று மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
இந்த மாநாட்டில் உக்ரைன் போர், இஸ்ரேல் போர், பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.