இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க 875 கோடி ரூபா மதிப்பீடு முன்வைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நேற்று (10.06) தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் நிறைவடைந்ததன் பின்னர் மீளப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்புடன்,
ஜனாதிபதியின் செலவுத் தலைப்புகளின் கீழ் அந்த ஏற்பாடுகளுக்கு நாடாளுமன்றத்தின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த ஏற்பாடுகளால் பாதீட்டு பற்றாக்குறைக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க உறுதியளித்துள்ளார்.