தமிழ் தேசிய கூட்டமைப்பினரை இலக்கு வைக்கும் சஜித், அநுர 

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா உள்ளிட்ட வடக்கின் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அரசு கட்சி அலுவலகத்தில் இன்று(11.06) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

அநுரகுமாரவின் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனையும் சந்தித்துள்ளார்.

இதன்போது, நாட்டில் தற்போதைய அரசியல் சூழல், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து  நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது. மாகாண சபையினை தாம் ஏற்றுக் கொள்வதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே நேற்று(10.06) கலந்துரையாடல் இடம்பெற்ற நிலையில், இன்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கூட்டமைப்பினரை சந்தித்துள்ளார். 

எதிர்க்கட்சித் தலைவருடனான சந்திப்பின் போது, 13+ மற்றும் 13- அன்றி 13ம் திருத்ததை நடைமுறைப்படுத்தும் முறைமையினை சிறப்பாக முன்னெடுப்பது குறித்த திட்ட வரைபினை மேற்கொள்ளவுள்ளதாக சஜித் பிரேமதாசவும் தெரிவித்திருந்தார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version