வேற்றுக்கிரகவாசிகள் மனிதர்களுடன் மனிதர்களாக மாறுவேடத்தில் வாழ்வதாக அமெரிக்கன் ஹவார்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மிக நீண்ட காலமாக வேற்றுக்கிரகவாசிகளின் பறக்கும் தட்டுகள் தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த புதிய தகவலை ஹவார்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
பல தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்ட விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மூலம் இதுவரையில் வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் சரியான முடிவுகள் வெளிவரவில்லை.
பறக்கும் தட்டுக்கள் நிலத்தின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சில வேளைகளில் வேற்றுக்கிரகவாசிகள் மனித சமூகத்துடன் ஒன்றிணைந்திருக்கலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டள்ளது.