தேர்தல் ஒக்டோபர் மாதம் 05,ஆம் திகதி நடைபெறும் என சுற்றுலாத்துறை மற்றும்
காணி விவகாரங்கள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.
தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவார் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தற்போது தேர்தல் நடைபெறுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்ற சந்தேகங்களுக்கு மத்தியில் முதலில் ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் நடைபெறுமா என்ற கேள்விகளுக்கு மேலும் சந்தேகம் எழுப்பும் வகையில் அமைச்சர்
வெறுமனே ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார்.