முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 9 சந்தேகநபர்களை எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இன்று(14.06) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 9 சந்தேக நபர்கள் தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்துகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலம் பலமுறை நீடிக்கப்பட்டிருந்தமை சுட்கக்காட்டத்தக்கது.