இங்கிலாந்து சென்றவர்கள் பலி

இங்கிலாந்தில் குடியேறும் நோக்கோடு படகில் பயணித்த 27 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆங்கில கால்வாயில் குறித்த படகு கவிழ்ந்ததன் காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. பிரான்சிலிருந்து இவர்கள் இங்கிலாந்து நோக்கி பயணித்த நிலையிலேயே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.


34 பேர் இந்த படகில் பயணித்துள்ளனர். அவர்களில் ஒருவர் காணமல் போயுள்ளதாக தெரிவிதிக்கப்பட்ட அதேவேளை, மூவர் காபபற்றப்பட்டுள்ளனர். படகில் செல்லாமல் கரையில் காணப்பட்ட 4 பேர் இந்த சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் எனபிரான்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஐந்து பெண்களும், சிறுமி ஒருவரும் காணப்பட்டதாக செய்திகள் மேலும். தெரிவிக்கின்றன 2014 ஆம் ஆண்டு முதல் எடுக்கப்பட்ட தரவுகளின் படி இவ்வாறு குடியேற முயற்சித்து இறந்தவர்களில் அதிக தொகையை கொண்ட சம்பவமாக இது அமைந்துள்ளதாக, சர்வதேச குடிபெயர்பவர்களுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் அதிர்ச்சியும், கவலையளிப்பதாகவும் இங்கிலாந்த்து பிரதமர் பொரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ள அதேவேளை இவ்வாறு மக்களை கடத்தி கொலை செய்யும் குழுக்களை கட்டுப்படுத்த முடியாமல் உளளதாகவும் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்படவில்லை.

இங்கிலாந்து சென்றவர்கள் பலி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version