இறுதி அணியாக சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்த பங்களாதேஷ் 

டி20 உலகக் கிண்ணத் தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு பங்களாதேஷ் அணி தகுதி பெற்றுக்கொண்டது. நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியீட்டியதன் ஊடாக பங்களாதேஷ் அணி சூப்பர் 8 வாய்ப்பை உறுதி செய்து கொண்டது. மேற்கிந்திய தீவுகள், சென் வின்சென்டில் இன்று(17.06) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நேபாளம் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 106 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. பங்களாதேஷ் அணி சார்பில் எந்தவொரு வீரர்களும் கூடிய ஓட்டங்களை பெற்றுக் கொள்ளவில்லை

106 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 85 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது. பங்களாதேஷ் அணி சார்பில் பந்துவீச்சில் ஹசன் சகிப் 4 விக்கட்டுக்களையும், முஸ்தபிசுர் ரஹ்மான் 3 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்

இதன்படி, இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி அணி 21 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன், டி20 உலகக் கிண்ணத் தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுக்கொண்டது. ‘C’ குலாமில் இடம் பெற்றுள்ள பங்களாதேஷ் அணி பங்கு பற்றிய 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இதற்கமைய பங்களாதேஷ் அணியுடன் இந்தியா, அமெரிக்கா, அவுஸ்ரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version