‘தவறான அறிக்கைகள் சங்கடத்தை ஏற்படுத்துகிறது’ – லிட்ரோ

சமையல் எரிவாயு பாவனை தொடர்பாக பரவி வரும் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த சகல அறிக்கைகளையும் லிட்ரோ கேஸ் லங்கா விற்பனைப் பணிப்பாளர், ஜனக பத்திரண நிராகரித்துள்ளார்.

அத்துடன் உள்நாட்டு திரவ பெற்றோலியம் எரிவாயு சிலிண்டர்களின் கலவையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், தவறான அறிக்கைகளை வெளியிடுவதானது லிட்ரோ கேஸ் நிறுவனம், அரசாங்கம் மற்றும் 6 மில்லியன் மக்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்றும், சுமார் 150 ஆண்டுகளாக உள்ளுர் சந்தையில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரத்தின் மதிப்பீடோடு, எரிவாயுவை விநியோகம் செய்து வருவதாகவும் கூறினார்.

இதேவேளை, லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் இரசாயன எதிர்வினை பொறியியலாளர் ஜயந்த பஸ்நாயக்க கருத்து தெரிவிக்கையில், ”எரிவாயு என்பது ப்ரொப்பேன் பியூட்டேன் (Propane Butane) உற்பத்தியின் கலவையாகும். தொழில்துறை மற்றும் உள்நாட்டு பயன்பாட்டிற்கான ஒரே வாயு கலவை நீண்ட காலமாக ஒரு சர்வதேச சுயாதீன அமைப்பால் சோதிக்கப்பட்டு சான்றளிக்கப்பட்டது. கொழும்பு 7 இல் அண்மையில் நடந்த சம்பவம், பைப்பிங் (Piping) அல்லது ஹோஸ் முறைமையின் (Hose system) கசிவு காரணமாக ஏற்பட்ட சம்பவமாகும்.

கேஸ் சிலிண்டரில் உள்ள அழுத்தம் வாயுவில் உள்ள அழுத்தத்தை விட ஆறு மடங்கு அதிகமாகும். அந்த அழுத்தம் குறைக்கப்பட்டு ரெகுலேட்டர்  (Regulator) மூலம் வழங்கப்படுகிறது, மேலும் அழுத்தம் காரணமாக சிலிண்டர் மிக அரிதாகவே வெடிக்கும் என அவர் விளக்கமளித்தார்.

'தவறான அறிக்கைகள் சங்கடத்தை ஏற்படுத்துகிறது' - லிட்ரோ
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version