எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பார்கள் என ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாணந்துறை அலுவலகத் திறப்பு விழாவின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருந்த போது மக்களை நெருக்கடியிலிருந்து மீட்டு அவர்களது வாழ்க்கையை வழமைக்கு கொண்டு வருவதில் ஜனாதிபதி அக்கறை செலுத்தி வருவதாக விநாயகமூர்த்தி முரளிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக அடுத்த பதவி காலத்தையும் ரணில் விக்ரமசிங்கவுக்கே வழங்க வேண்டும் எனவும், தாமும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.