ஸ்பெயினில் நடைபெற்று வரும் 2024ம் ஆண்டிற்கான ‘Reunion International Villa de Bilbao’ – கண்டங்களுக்கான உலக மெய்வல்லுனர் சுற்றுப் பயணத்தில் இலங்கை தடகள வீரர்களான தருஷி கருணாரத்ன மற்றும் கலிங்க ஹேவா குமாரகே ஆகியோர் பதக்கங்களை சுவீகரித்துள்ளனர்.
தருஷி கருணாரத்ன பெண்களுக்கான 600 மீட்டர் ஓட்டப் போட்டியை 1:24.84 நிமிடத்தில் நிறைவு செய்து இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
இதனுடாக, ஜப்பான் தடகள வீராங்கனையான அயனோ ஷியோமியினியின் சாதனையை முறையடித்து, தருஷி கருணாரத்ன 600 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஆசிய கண்டத்தில் புதிய சாதனையை படைத்துள்ளார்.
இதேவேளை, இலங்கையின் கலிங்க ஹேவா குமாரகே ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியை 45.91 வினாடிகளில் நிறைவு செய்து மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.