இரத்தினபுரி மாவட்டம் கிரிந்த பகுதியில் 104 கிலோ கிராமிற்கும் அதிகமான போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
கிரிந்த கடற்பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் கரையோர காவற்படை இணைந்து நேற்று (21.06) மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு
நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, ஆறு பொலித்தீன் பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த 104 கிலோ 815 கிராம் உள்ளூர் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதன் பெறுமதி 20 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்களது வாகனமும் கைப்பற்றப்பட்டதாக கடற்படை அறிவித்துள்ளது.
திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 28 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.