எலிக்காய்யச்சலால் 5000 பேர் பாதிப்பு

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எலிக்காய்ச்சலால் ஆண்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மத்தியிலும் நோய் பரவல் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாக
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் துலானி தாபரே குறிப்பிட்டார்.

இரத்தினபுரி, கேகாலை, காலி, களுத்துறை, மாத்தறை, மொனராகலை,
குருநாகல் மாவட்டங்களில் அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஆண்டு முழுவதும் எலிக்காய்ச்சலால் 100 அல்லது அதற்கு மேற்பட்ட இறப்புகள் பதிவாவதாக தொற்றுநோயியல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நோயை உண்டாக்கும் பாக்டீரியா முக்கியமாக எலிகளின் சிறுநீரில் உள்ளதால் அது கால்நடைகள், நாய்கள் மற்றும் பன்றிகளின் மலம் மற்றும் சிறுநீரில்
உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த நோய்க்கிருமி பாக்டீரியாக்களுடன் விலங்குகளின் சிறுநீர், நீருடன் இணைந்த பிறகு,
அது கால்களில் உள்ள காயங்கள் மற்றும் கண்கள் மற்றும் வாயின் சளி சவ்வுகள் வழியாக மனித உடலில் நுழைகிறது.

முறையா சிகிச்சை பெறாமையே உயிரிழப்புகளுக்கான காரணம் என தெரிவித்த அவர்
முறையான சிகிச்சை பெற்று இந்த நோயை குணப்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version