அமைச்சர் ஜீவன் தொண்டமான்மாத்தளை மாவட்டத்திற்கு கள விஜயம்

மாத்தளை மாவட்டத்திற்கு இன்று (21.06) விஜயம் மேற்கொண்ட நீர் வழங்கள் மற்றும் பெருந்தொட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மத வழிபாடுகள் உட்பட பாடசாலைகளுக்கும் கள விஜயம் மேற்கொண்டார்.

அவர் மாத்தளை நகர ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்திற்கு சென்று அங்கு பூஜை வழிபாடுகளில் கலந்துக்கொண்டதோடு, ஆலய நிர்வாக சபையினருடனும் கலந்துரையாடினார்.

குறிப்பாக ஆலயத்தினூடான அறநெரி கல்வியை முன்னெடுத்துச் செல்வதற்கு குறைபாடாகக் காணப்பட்ட கட்டிட வசதிகளை தனது அமைச்சினூடாக நெறிப்படுத்தி தருவதாக நிர்வாக சபையினரிடம் அமைச்சர் தெரிவித்ததோடு, ஆலய நினைவுப் புத்தகத்தில் கருத்தைப் பதிவிட்டார்.

தொடர்ந்து மாத்தளை கல்வி வலயத்திற்குற்பட்ட மாத்தளை இந்துக் கல்லூரி, பாக்கியம் தேசிய கல்லூரி, கந்தேநுவர தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைளுக்கும் விஜயம் மேற்கொண்டார்.

இதில் மாத்தளை இந்துக் கல்லூரி மாணவர்களின் நீண்டகால தேவைப்பாடாக காணப்பட்ட ஒன்றுகூடல் கட்டிடம் அமைப்பதற்காக தனது அமைச்சு நிதியிலிருந்து நேரடியாக 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியிருப்பதாக ஆசிரியர், மாணவர்களிடம் விளக்கமளித்தார்.

பாடசாலை கட்டிட புனரமைப்பிற்கான நிதி ஒதுக்கியமைக்காக பாடசாலை அதிபர், ஆசிரியர், மாணர்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் மாத்தளை மாவட்ட இ.தொ.கா உபத்தலைவர் சிவஞானம், முன்னாள் மாத்தளை மாநகர சபை தலைவர் சாந்தனம் பிரகாஷ் இ.தொ.கா பிரமுகர்கள் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version