பிறப்புச் சான்றிதழின்றி தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள வாய்ப்பு

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இதுவரை தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு, தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கால அவகாசம் இம்மாதம் 30ம் திகதி வரை உள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 31ம் திகதி வரை வழங்கப்பட்டிருந்த கால அவகாசம், பிரதேச செயலாளர்களின் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு நீடிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version